முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் தூதுவராகவும், அமைச்சின் செயலாளராகவும் நியமிப்பு!
இலங்கையின் தூதுவராகவும், அமைச்சின் செயலாளராகவும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிப்பு! இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கையில் தூதுவராகவும், அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இத்தாலிக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார், அத்துடன், மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக கருத்து வெளியிடுகையில்,
“ஐந்து அரசு அமைச்சுகளின் செயலாளர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது .சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையிலான குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக அனுர திசாநாயக்கவும், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளராக ஸ்ரீநிமல் பெரேராவும், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸையும் நியமித்ததற்கு உயர் குழு ஒப்புதல் அளித்தது.
அத்துடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக பத்ரானி ஜயவர்தனவும், காணி மற்றும் நில மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராக ஆர்.ஏ.கே.ரணவக்கவையும் நியமிக்க அனுமதிக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலிக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஏர் மார்ஷல் சுமங்கல டயஸை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தம்மிகா தசநாயக்க தெரிவித்துள்ளார்.