யாழில் இடம்பெற்ற இராணுவத்தினரின் புத்தாண்டு நிகழ்வுகள்
தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் M.G.W.W.W.M.C.B விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக போட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள போட்டியாளர்கள், இன மத பேதமின்றி இதில் கலந்துகொண்டனர். இதன்போது கோலம் போடுதல், கிடுகு பின்னுதல், சாக்கோட்டம், தலையணை சண்டை உள்ளிட்ட பல போட்டிகளும், நடனங்களும் இடம்பெற்றன.
போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் விக்ரமசிங்க, இராணுவ உயர் அதிகாரிகள், போட்டியாளர்கள்
மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.