ரைசியின் இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமிய புரட்சியை விட அதிகமாக திரண்டுள்ள மக்கள்
ஈரானின் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள பெரிய நகரமான Tabriz இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், நாட்டின் இஸ்லாமியப் புரட்சியின் போது திரண்ட மக்களிலும் பார்க்க அதிக மக்கள் திரண்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி விழுந்ததில், இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossain Ameer Abdullah) ஆகியோர் நேற்றுமுன் தினம் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஈரான் புலனாய்வுத்துறை
குறித்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் தற்போது விபத்து தொடர்பில் விசாரணையை ஈரான் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் ஈரானின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
Footage from Iranian President Ebrahim Raisi's funeral in Tabriz pic.twitter.com/wBQrdCaOKo
— NEXTA (@nexta_tv) May 21, 2024
விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள பெரிய நகரமான Tabriz இல் நடந்த இறுதி ஊர்வலம், நாட்டின் இஸ்லாமியப் புரட்சியின் போது திரண்ட மக்களிலும் பார்க்க அதிகம் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |