வடக்கில் படைகள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்! சிறீதரனின் கேள்விக்குப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதில்
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மிக அத்தியாவசியமானவைத் தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(28) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமான காணி
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"வடக்கு, கிழக்கில் உள்ள முகாம்கள் மற்றும் படையினர் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்பு சார் ஆலோசனைக்குழு கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
எனவே, மிகவும் அத்தியாவசியமான காணியை மட்டும் வைத்துக்கொண்டு, ஏனையவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு
பல வருடங்களாக மூடப்பட்டிருந்த பலாலி, அச்சுவேலி வீதி திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் (சிறீதரன்) கூறியதுபோல் வடக்கு, கிழக்கில் 3 இலட்சத்து 17 ஆயிரம் படையினர் இல்லை. முப்படைகளிலும் மொத்தமாக 2 இலட்சத்துக்கும் குறைவான படையினரே தற்போதுள்ளனர்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முப்படையினர், பொலிஸாரை நாம் ஈடுபடுத்தியுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam