வன்னியில் காணியை இழந்த மக்களுடனான சந்திப்பை தவிர்த்து விமானத்தில் பறந்த இராணுவத் தளபதி

Mullaitivu Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Parthiban Mar 29, 2024 04:01 PM GMT
Report

தமிழர்களின் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை வன்னி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னி கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே காணி உரிமையாளர்களைச் சந்திக்காமல் வெளியேறியதை அடுத்து, இராணுவக் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள காணியை விடுவிக்க முடியாது என ஏனைய இராணுவ அதிகாரிகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். 

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

மக்களின் பாதுகாப்பு

தனது பூர்வீகக் காணிக்கு மாற்றுக் காணி வழங்கும் முன்மொழிவை நிராகரித்த தமிழ்த் தாய் ஒருவர், இராணுவ அதிகாரிகளின் கருத்து தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

~/military-commander-flew-away-avoid-meeting-1711707338

“கட்டளை பணியகம் என்பது மக்களின் பாதுகாப்புக் கருதி முல்லைத்தீவில் இருக்க வேண்டுமாம். என்பதை விளக்கும் படங்களையும் வரைபடங்களையும் காட்டுகிறார்கள்.

இந்த கட்டளை பணியகத்தின் நடுவில் வைத்து இரண்டு பக்கங்களிலும் பாதுகாப்பான காணியை வழங்குவதாகவும் இரண்டு ஏக்கர் உரிமையாளர்களுக்கு இரண்டு ஏக்கர் தந்து அதற்குள் வீட்டுத் திட்டம் அமைப்பதாகவும் அங்கு கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏமாற்றம்தான்.” 

மார்ச் 27ஆம் திகதி இராணுவத் தளபதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தயாரானார்கள்.

காணி உரிமையாளர்கள்

5 காணி உரிமையாளர்கள் இராணுவத் தளபதியை சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிற்பகல் மூன்று மணியளவில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலைமையகத்தின் இராணுவ அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து தமிழர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

~/military-commander-flew-away-avoid-meeting-1711707338

அன்றைய தினம் காணி உரிமையாளர்களுடன் இராணுவத் தளபதி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், பிற்பகல் ஐந்து மணியளவில் அவர் விமானம் மூலம் அங்கிருந்து வெளியேறியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் பலர் இரவு 7.45 மணியளவில் போராட்டத்திற்கு வந்த ஐந்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தலைமையகத்தை முல்லைத்தீவில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்த தமிழ்த் தாய், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இருபுறமும் காணப்படும் தமது பாரம்பரிய காணிக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் வலியுறுத்தினார்.

மாற்றுக் காணி

"இவர்கள் வசிக்கும் குடியிருப்புக் காணி கேள்விக்குரிய நிலையில் உள்ளது. ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாற்றுக் காணி வாங்குவதாக இருந்தால் முன்னதாகவே வாங்கியிருக்க வேண்டும். மாற்றுக் காணியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை."

~/military-commander-flew-away-avoid-meeting-1711707338

 கேப்பாபுலவில் மாத்திரம் 62 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான 171 ஏக்கர் காணி இராணுவ முகாமுக்காக பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு முன்பாக காணி உரிமையாளர்கள் மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், இரண்டு கட்டங்களாக காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்திருந்து.

விவசாய நிலங்கள்

ஆனால் மத வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது மண்டபங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நிர்மாணித்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

~/military-commander-flew-away-avoid-meeting-1711707338

தமது விவசாய நிலங்களையும் தமிழ் மக்களின் வருமானத்தையும் இராணுவம் அபகரித்து வருவதாக குற்றம் சுமத்தும் காணி உரிமையாளர்கள், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இன்னும் யுத்த அனாதைகளாகவே வாழ்ந்து வருவதாக வலியுறுத்துகின்றனர்.

உயரும் தங்கத்தின் விலை

உயரும் தங்கத்தின் விலை

இலங்கையின் பல்வேறு தேவாலயங்களில் அனுஸ்டிக்கப்பட்ட பெரிய வெள்ளி தின ஆராதனைகள்

இலங்கையின் பல்வேறு தேவாலயங்களில் அனுஸ்டிக்கப்பட்ட பெரிய வெள்ளி தின ஆராதனைகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US