புலம்பெயர்ந்தோர் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ள வேண்டும் : மார்க் என்ட்ரோ பிரஞ்ச்
புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche ) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் இன்று (05/06/2024) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாரிய திட்டங்கள்
மேலும் தெரிவிக்கையில், முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது.
வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளளும் போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் . அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை எனவும் அவர் இதன்போது வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |