புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கிடைத்த பல பில்லியன் டொலர் - உண்மையை வெளிப்படுத்திய ஜனாதிபதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாய்நாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றி வரும் ஜனாதிபதி சற்று முன்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணத்தினால் 4 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை எட்டியதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் பல்வேறு முனைகளில் செல்வாக்கு செலுத்தும் சூழலில் தொழில்முனைவோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த நாட்டிற்காக உறுதிமொழியை வழங்கி இந்த உதவியை செய்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.