இலங்கையிலிருந்து வேலைக்காக வெளிநாடு செல்வதில் வரப்போகும் கட்டுப்பாடு
இலங்கையிலிருந்து வேலைக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் கட்டுப்பாடு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கையிலிருந்து பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சர்வதேச தரத்திலான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பயிற்சிகள்
இந்த நிலையில் இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கான உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
