மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கியது இந்தியா!
உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தத்தினால் 2019 மே மாதம் முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்த இந்தியா, தற்போது அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள விநியோகத் தடையால் மீண்டும் ஈரானை நாடியுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
விநியோகப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளதால், தற்போது ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் பணப்பரிமாற்றச் சிக்கல்கள் ஏதுமில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
வணிக ரீதியான லாபத்தைக் கருத்திற்கொண்டு எந்த நாடுகளிலிருந்தும் எண்ணெயைப் பெற்றுக்கொள்ள இந்திய நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை
விநியோகத் தடை
ஈரானிலிருந்து 44,000 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றப்பட்ட கப்பல், கடந்த புதன்கிழமை மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் தேவைகளை உறுதி செய்துள்ளன. இதற்கான கொடுப்பனவுகளில் (Payment) எந்தத் தடையும் இல்லை.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 15 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri