இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்
இலங்கை கடல் எல்லையில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மற்றுமொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்றுவரும் அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் நேற்று நள்ளிரவு ஈரான் நாட்டின் யுத்தக் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் நிலையில், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் மற்றுமொரு ஈரானியக் கப்பல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கை ஒன்று தேவை.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
இராஜதந்திர ரீதியான நடவடிக்கை
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன், ஈரானின் யுத்தக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும்.
ஈரானிய கப்பலில் தாக்குதலுக்கு இலக்கான மக்களைக் காப்பாற்றிய இலங்கை இராணுவத்தை நாங்கள் பெருமையோடு நினைவுபடுத்துகின்றோம். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாாக இராஜதந்திர ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு கடுமையான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எமது நாட்டிற்கு அருகில் அத்தகைய கப்பல் அழிக்கப்பட்டது குறித்து அரசாங்கம் சபைக்கு அறிவிக்கத் தவறியமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய பிரஜைகளின் உடல்களை அடக்கம் செய்வதற்காக 40 அடி கொள்கலன் வாகனங்களை மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் எதிர்பார்க்கின்றேன். நமது நாட்டின் கடல் எல்லைகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பது தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam