மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் - வளைகுடா கடற்பரப்பில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோர்
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால் இருபதாயிரம் மாலுமிகள் மற்றும் பதினையாயிரம் கப்பல் சுற்றுலா பயணிகள் வளைகுடா கடற்பரப்பில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் டோமிங்குவேஸ் தெரிவிக்கையில்,
"இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் நியாயப்படுத்த முடியாது" என கூறியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இராணுவம் முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதால், அவ்வழியாக செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 90 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல், எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை "தேவைப்பட்டால் அமெரிக்க கடற்படை எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பாக வரும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அடுத்த தலைவர் தெரிவு! முக்கிய முடிவெடுக்கவுள்ள ட்ரம்ப்.. அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போர்க்களம்