ட்ரம்பை திக்குமுக்காட வைத்த மொஜ்தபா கமேனி.. ஈரானின் எண்ணெய் தொடர்பில் அநுர!
பெப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் முழுவதும் உள்ள பல இடங்கள் மற்றும் நகரங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரித்தது.
இதில், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் பல ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல், அமெரிக்கத் தளங்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்கா என்ன தான் போரில் வெற்றி பெற்று வருவதாக அறிவித்து வந்தாலும் சர்வதேச தரப்பில், ஈரான் அமெரிக்காவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் உள்ளிட்ட பல உள்நாட்டு அரசியல் தகவல்களையும் ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,