மித்தெனிய ஐஸ் போதைப்பொருள் விவகாரம் : செய்திகள் தொடர்பில் நாமல் தரப்பின் மறுப்பு
மித்தெனிய பகுதியில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருட்களுக்கான இரசாயனங்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தரப்பு மறுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு குறித்த செய்திகள் போலியானவை என்று அறிவித்துள்ளது.
ராஜபக்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்ட இரசாயனங்கள் மீட்கப்படடிருந்த நிலையில் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் நாமல் ராஜபக்கச தரப்பு நேரடியாக மறுப்பு வெளியிட்டுள்ளதுடன் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் நாமலின் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது.
அத்துடன் ராஜபக்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





