உக்ரைனுக்கு உதவும் மைக்ரோசொப்ட் நிறுவனம்
உக்ரைனில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை உக்ரைன் அரசு ஆவணப்படுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் உதவும் என்று உக்ரைனின் டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சர் Mykhailo Fedorov தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
டாவோஸில் நடந்த சந்திப்பின் போது உக்ரைனுக்கு உதவ தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் ஒப்புக்கொண்டுள்ளது.
நாங்கள் நீண்ட காலமாக மைக்ரோசொப்ட் உடன் ஒத்துழைத்து வருகிறோம், மேலும் அவர்கள் போரின் போது உக்ரைனை தீவிரமாக ஆதரித்தனர். முதல் நிறுவனமாக மார்ச் தொடக்கத்தில் ரஷ்யாவில் அனைத்து புதிய தயாரிப்புகள் விற்பனையை மற்றும் சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுத்தியது.
அதனை தொடர்ந்து 2022 இறுதி வரை உக்ரைனுக்கு இலவச கிளவுட் சேவைகளை வழங்கியுள்ளதுடன், மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் உக்ரைனை ஆதரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பின் போது குடிமக்களுக்கு எதிராக ரஷ்யா அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளதுடன், 10,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனில் பொதுமக்களை குறிவைப்பதையோ அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபடுவதையோ ரஷ்யா மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
