விரைவில் நிறுத்தப்படவுள்ள சேவை: மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Wordpad சேவையை நிறுத்தப்போவதாக மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம் அறிவித்துள்ளது.
Wordpad என்பது ஒரு அடிப்படை Text editing செயலியாகும். இது பயனர்கள் வடிவமைக்கப்பட்ட உரையுடன் ஆவணங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும்.
இது பிற கோப்புகளுக்கான படங்கள் மற்றும் பிற இணைப்புகளையும் இணைக்கலாம். 1995ஆம் ஆண்டு Windows95 பாதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து கணினிகளில் இது தானாகவே உள்பொருத்தப்பட்டிருக்கும் செயலியாக wordpad உள்ளது.
Microsoft நிறுவனம் தற்போது wordpad பயனர்களுக்கு மாற்றாக Microsoft word பயன்பாட்டையும், Rich text format தேவையில்லாதவர்களுக்கு Notepad பரிந்துரைக்கிறது.
wordpad இனி புதுப்பிக்கபடாது என்றும் Windowsன் எதிர்கால புதிய பதிப்பு வெளியீட்டில் wordpad நீக்கப்படும் என்றும் Microsoft இன்று தெரிவித்துள்ளது.
Notepad பரிந்துரைக்கப்படுகிறது
இதேவேளை நாங்கள் .doc மற்றும் .rtf போன்ற ஆவணங்களுக்கு Microsoft word மற்றும் .txt போன்ற எளிய உரை ஆவணங்களுக்கு Notepad பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு wordpad அதிக கவனத்தை பெறாத காரணத்தாலும்,பயனர்கள் Microsoft word மற்றும் பிற நவீன செயலிகளை அதிகளவில் பயன்படுத்துவதாலும் wordpad ஐ Microsoft நிறுவனம் நிறுத்திவுள்ளது.
எப்போது wordpad செயலி Windows மென்பொருளிலிருந்து நீக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.அடுத்த ஆண்டு புதிய Windows12 அறிமுகப்படுத்தும்போது நீக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.