நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் படைத்த சாதனைகள்..!
ஐ.பி.எல் 2025 தொடரின் 50ஆவது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்(MI)அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்(RR) அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் நிறைவில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் மும்பை அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 48 ஓட்டங்ககள் சேர்த்தார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் ரோபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐ.பி.எல்லில் சூர்யகுமாரின் ஓட்ட எண்ணிக்கை 467 ஆக உயர்ந்ததுள்ளது.
இதையடுத்து, அதிக ஓட்டங்கள் குவிப்புக்காக வழங்கப்படும் ஓரஞ்சு நிற தொப்பியும் சூர்யகுமார்யாதவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் ரோகித் சர்மாவும் நேற்றையதினம் சாதனையொன்றை படைத்திருந்தார். இது தொடர்பான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
