அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பதற்றம்! தீ விபத்தில் சிக்கி பலர் உடல்கருகி பலி
அமெரிக்கா- மெக்சிகோவின் எல்லையில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணத்தை மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் வெளியிடவில்லை எனவும், தீ விபத்தில் காயமடைந்த 29 பேர் குறித்து விசாரணையையுமம் தொடங்கியுள்ளனர்.
தெருக்களில் இருந்து புலம்பெயர்ந்தோர் குழுவை அழைத்து வந்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய பின்னர், தேசிய இடம்பெயர்வு நிறுவனத்தின் (INM) அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உள்ளூர் ஊடகங்கள் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் பலர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
மேலும் விபத்து இடம்பெற்ற இடத்தில் சுமார் 70 புலம்பெயர்ந்தோர் இருந்தனர் என்றும், பெரும்பாலும் அவர்கள் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



