அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் நால்வர் மீது தாக்குதல்: வெளியான காரணம்- செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்க பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டுள்ளார்.
அந்தப் பெண், “இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது.
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர்.
இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்
நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப்போங்கள்” எனக் கூச்சலிட்டுள்ளார்.
இந்நிலையில், திடீரென அவர் இந்திய பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் அவர்களை பேசியதையும் இந்திய பெண்கள் தாக்கப்பட்டதையும் அங்கிருந்த ஒருவர் காணொளியில் பதிவு செய்துள்ளார்.
அக்காணொளி வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
