வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை சிவப்பு எச்சாிக்கை
இலங்கையின் பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தொிவித்துள்ளது.
இலங்கையின் தென் கிழக்கில் நிலவும், வளிமண்டல குழப்பம் காரணமாக அதிக மழை பெய்துள்ளது.
இந்த வானிலை அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இது, பின்னர் வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
