ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகள் கட்டாயம்
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளில் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் கட்டண மானிகள் பொருத்தப்பட்டிருப்பதை, கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் கட்டண மானிகள் இல்லாத காரணத்தினால், சாரதிகள் விரும்பிய தொகையை அறவிடுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன (Lalith Darmasena) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய மாகாணங்களில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மானிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.



