வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டில் உள்ள சில கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (24.06.2026) முற்பகல் 11 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை செல்லுபடியாகும்.
எச்சரிக்கை
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இந்த அறிவிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam