அஸ்திரேலியாவில் தடைசெய்யப்படும் சமூக ஊடகக்கணக்குகள்
அஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத்தடை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
16 வயதுக்குட்பட்டவர்களின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் சமூக ஊடகக் கணக்குகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கின்றன.
அதன்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் பயனர்களுக்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் அவர்களின் கணக்குகள் மூடப்படும் என்று குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் செயலிகளின் மூலம் அறிவிக்கப்படும் என்று Instagram, Facebook and Threads நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.
டிசம்பர் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படும் இந்த தடை, TikTok, YouTube, X மற்றும் Reddit உள்ளிட்ட பல தளங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு பின்னர்
டிசம்பர் 4 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் மெட்டாவின் சமூக ஊடக தளங்களில் கணக்குகளை உருவாக்க முடியாது.
தடையால் பாதிக்கப்பட்டவர்கள் 16 வயதை எட்டியதும் அவர்கள் கணக்குகளை புதுப்பிக்கலாம் என்றும், அவர்களின் தகவல்களையும் தரவையும் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அவர்களின் கணக்குகளை நீக்கலாம் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம்
அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை என்பது, வயது குறைந்த பிள்ளைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மிகவும் விரிவான முயற்சியாகும்.
மேலும் இது உலகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டாளர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
வயது குறைந்த கணக்குகளைத் தடுக்க "நியாயமான நடவடிக்கைகளை" எடுக்க சமூக ஊடக தளங்களுக்கு இது ஒரு கடமையை விதிக்கிறது,
மேலும் சட்டத்தை மீறும் தளங்களுக்கு அவுஸ்திரேலிய டொலர் $49.5 மில்லியன் ($32.09 டொலர் மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |