விடுதலைப் புலிகளை நினைவு கூர உரிமை இல்லை - பிமல் ரத்நாயக்க பகிரங்கம்!
உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது என்ற போதிலும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையாலேயே தமிழரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கவில்லை.
அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் உங்கள் மீது முன்வைத்த விமர்சனக் கணைகளையே எம்மை நோக்கி மீளச் செலுத்த வேண்டாம்.
மக்களின் உரிமை
புதிய ஆயுதம் என்பது, எம்மைவிட சிறந்த திட்டங்கள் அவசியம் என்பதாகும். தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது.

2025 நவம்பர் மாதமும் அவ்வாறேதான். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல.

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவுத் தூபி எம் மனங்களில் இருந்தால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |