உலகம் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம் செயலிழப்பு
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது என புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் இன்ஸ்டாகிராமை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சிக்கலை விரைவில் தீர்த்துவிட்டோம்" என்று இன்ஸ்டாகிராம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்கள் நெட்வொர்க் செயலிழப்பு குறித்து இன்னும் புகார் கூறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
500 மில்லியனுக்கும் அதிக கணக்குகள்
செயலிழப்பின் காரணமாக அமெரிக்காவில் உள்ள 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் தளத்தை அணுகுவதில் சிக்கல்களைப் எதிர்நோக்கியதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நெட்வொர்க்கை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இலங்கையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
