கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை

Facebook Instagram Canada Meta
By Dharu Jun 24, 2023 05:18 AM GMT
Report

கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது நிறுத்தப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவின் செய்தித்துறை பாதிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை கருத்தில் கொண்டே மெட்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், போராடி வரும் கனடாவின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.

கனடா அரசு எச்சரிக்கை

கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை | Meta Decides Ban On Social Media With Canada

இதன்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்தில், டிஜிட்டல் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது செய்தி உள்ளடக்கத்திற்காக கனடா அரசிற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், இந்த நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சட்ட மூலத்தை பின்பற்றாத நிறுவனங்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கனடா அரசு எச்சரித்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் 

கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை | Meta Decides Ban On Social Media With Canada

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், தனது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை கனடா நாட்டிற்குள் கிடைப்பதை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது.

மேலும், கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்திற்கு எதிராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW      


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US