உலக கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த மெஸ்ஸி! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் படைத்துள்ள சாதனைகள் அளப்பரியது.
காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மெஸ்ஸியின் கனவு நனவாகி ஆர்ஜெண்டினா வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.
இதற்கமைய, மெஸ்ஸியின் வெற்றியை கொண்டாடும் முகமாக தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், சோள வயலில் விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக வரையப்பட்டுள்ள ''லியோனல் மெஸ்ஸி''-யின் பிரம்மாண்ட ஓவியம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் தீவிர இரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை பயிரிட்டு ஓவியத்தை உருவாக்கி உள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
