இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமருக்கு சொல்லும் செய்தி

Sri Lanka Refugees Sri Lanka Australia
By Jenitha Jun 17, 2022 10:15 AM GMT
Report

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், பிரியா நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் சுமார் 4 ஆண்டுகள் தனிமையான தடுப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், இக்குடும்பத்திற்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொல்லும் செய்தி 

இந்நிலையில், பிலோலா நகருக்கு திரும்பிய பின்னர் வழங்கிய முதல் தொலைக்காட்சி பேட்டியில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கும் முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் ஒரு செய்தியை பிரியா தெரிவித்திருக்கிறார்.

“அவர்களது வாழ்க்கை ஒரு நல்ல வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்பதே பிரியா தெரிவித்த செய்தி.

அதற்கு, “நீங்கள் ஸ்காட் மாரிசன் மற்றும் பீட்டர் டட்டனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என நெறியாளர் லிசா வில்கின்சன் எழுப்பிய கேள்விக்கு “ஆமாம், ஒரு நல்ல வாழ்க்கை,” என தமிழ் அகதியான பிரியா பதிலளித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமருக்கு சொல்லும் செய்தி | Message From Sl Tamil Refugee Prime Minister

இவர்களது விடுதலைக்காக செயல்பட்ட ஆஸ்திரேலியரான ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ்,“நாங்கள் பிரியா மற்றும் நடேசலிங்கத்தை மக்களாக தான் பார்த்தோம், இவர்கள் அகதிகள் கிடையாது, இவர்கள் எங்களில் ஒருவர்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறை வைத்திருப்பதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலிய அரசு செலவழித்திருக்கிறது.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான இவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018 ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு. கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இக்குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர், கடந்தாண்டு முதல் பெர்த் நகரில் சமூகத் தடுப்பில் இக்குடும்பம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இவர்கள் பிலோலா பகுதியில் வாழ ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   



Gallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US