புதிய அமைச்சர்களுக்கு முன்னாள் அமைச்சர் பந்துல வழங்கும் செய்தி(Photo)
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இது தொடர்பில் அவர் பதிவொன்று இட்டுள்ளார்.
18 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை இன்று முற்பகல் பதவியேற்றது.
கடந்த காலங்களில் பதவி வகித்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் புதிய அமைச்சரவையில் பதவி ஏற்கப் போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், பல புதுமுகங்களுக்கு தற்போது அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களையும் அழுத்தங்களையும் கொடுத்த நிலையில் முன்னர் இருந்த அமைச்சரவை இரவோடு இரவாக பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
