இலங்கையில் இருந்து விடைபெறவுள்ள நிலையில் எலைய்னா டெப்ளிட்ஸின் செய்தி
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை எதிர்காலத்தில் விரிவுப்படுத்துவதற்கு, முழு உடன்பாடு இல்லாத விடயங்களில் திறந்த தொடர்பும் செயல்திறனும் தேவை என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து விடைபெறவுள்ள தூதுவர் எலைய்னா பி டெப்ளிட்ஸ் (Alaina B.Teplitz) காணொளி செய்தி ஒன்றில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அனைத்து பொதுவான இலக்குகள் மற்றும் முதலீடுகளுக்கு, இலங்கையும் அமெரிக்காவும் சில நேரங்களில் உடன்படவில்லை.
எனினும் இராஜதந்திரத்தின் சாராம்சம் என்பது தொடர்ந்து பேசுவதும், சவால்களை எதிர்கொண்டு செயல்படுவதும் ஆகும் என்று டெப்ளிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை நிலைநிறுத்துவது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளே என்றும், பதவியில் இருந்து விலகிச் செல்லும் தூதர் எலைய்னா பி.டெப்லிட்ஸ் தமது காணொளிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam