ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka Politician New York
By Rakesh Sep 17, 2023 11:50 PM GMT
Report

மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | Message For Jr Jayawardena 117Th Birth Anniversary

கொழும்பில் நேற்று (17.09.2023) நடைபெற்ற ஜே.ஆர், ஜயவர்தனவின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட செய்தியை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பீ. மும்முல்லகே வாசித்தார். அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு


சமூக பொருளாதாரத்தில் புரட்சி

"ஜே.ஆர். ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும்.

ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | Message For Jr Jayawardena 117Th Birth Anniversary

நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது.

எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர். ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன.

ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | Message For Jr Jayawardena 117Th Birth Anniversary

1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார்.

காடையர்களால் துரத்தி துரத்தித் தாக்கப்படும் கஜேந்திரன்(Video)

காடையர்களால் துரத்தி துரத்தித் தாக்கப்படும் கஜேந்திரன்(Video)


அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சி சார்பற்ற நபராக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | Message For Jr Jayawardena 117Th Birth Anniversary

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜயவர்தன முன்வைத்தார்.

அரச நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். இதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

இந்தக் கூட்டு முயற்சிகளால்தான் இன்று சீனா பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது. ஜே.ஆர். ஜயவர்தன ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவை மாற்றமாட்டார்.

ஜே.ஆரின் கொள்கையை பின்பற்றியிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு: ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | Message For Jr Jayawardena 117Th Birth Anniversary

அதை மாற்றினால், அது மக்கள் நல ஆட்சியை உருவாக்க மட்டுமே செய்யப்பட்டது. அவருடைய ஆட்சியின் போது அவருடன் ஒரு நல்ல இளைஞர் கூட்டம் இருந்தது.

இளைஞர்களுக்கு வாய்ப்பையும் அதிகாரத்தையும் கொடுத்தார். தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தன ஒரு சிறந்த முன்மாதிரி என தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

ஜே.ஆரின் மூத்த பேரன் கருத்து

"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது என மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனும் ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினருமான பிரதீப் ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் "இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம். நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு நாம் பூரண ஆதரவளிக்கின்றோம். எனவே, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன்களான பிரதீப் ஜயவர்தன, ஏ.ருக்சான் ஜயவர்தன, அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி. புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US