முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை(Mervyn Silva) தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் இன்று(5) உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொடை பிரதேசத்தில் அரசாங்க காணியொன்றை முறைகேடாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல் நீடிப்பு
இன்றைய தினம் குறித்த வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேர்வின் சில்வா உள்ளிட்டவர்களை சிறைச்சாலை நிர்வாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தது அதன் போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர, மில்ரோய் பெரேரா ஆகியோருக்கு மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.