கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலில் எண்ணெய் கசிவு: நட்டயீடு கோரும் இலங்கை அரசாங்கம்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு எண்ணெய் கசிவை ஏற்படுத்திய இந்திய கப்பலை கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) கைப்பற்றியுள்ளது.
எண்ணெய் கசிவு தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக MEPA இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ், MEPA இந்த சம்பவத்திற்கு இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் பராமரிப்பு நடவடிக்கை
இந்திய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இந்தக் கப்பல் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
MEPA நடத்திய சிறப்பு விசாரணையில் கப்பலில் இருந்து ஹைட்ரோலிக் எண்ணெய் கசிந்தமை தெரியவந்தது.
நிறுவனத்தின் உரிமையாளர் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், MEPA சட்டத்தின் படி, இழப்பீடு வழங்வும் தீர்மானித்துள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுக பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கப்பலின் தலைமை அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
