தந்தையை தாக்கி கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன்
வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்த 63 வயதான தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தாம் கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல்
கொலை ஒன்று நடந்திருப்பதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் செயற்பட்ட குளியாப்பிட்டிய பொலிஸார், பொல்கொல்லேவ பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி கொல்லப்பட்டவரின் மகனை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் மோரகல் ஜேடிதுரயலாகே சரத் குமாரசிங்க என்ற 63 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார்.
மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் மகன்
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகன் மூளை வளர்ச்சி குன்றியவர் எனவும் மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
