கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை! கணவன் தூக்கிட்டு தற்கொலை
கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் நபர் ஒருவர் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது மனைவி மற்றுமொரு பெண்ணுடன் நேற்று வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் அவர்களை தாக்கி மனைவியை கொலை செய்துவிட்டு மற்றைய பெண்ணையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய பெண் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் தம்பதியினர் எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.