நுவரெலியாவில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்த மனநோயாளி கைது!
நுவரெலியா- பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22.11.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் 3 மதுபான போத்தல்களை எடுத்து வெளியில் எடுத்து வந்து நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பயணித்த வாகனங்களின் உன் பக்க கண்ணாடிகளுக்கு குறி வைத்து அடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் நடவடிக்கை
இதன் போது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் கண்ணாடிகளை அடித்து உடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கைது செய்து இன்றைய தினம் (23) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அங்கொட தேசிய மனநல வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு உத்தரவு பெறப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.