பொலிஸ் அதிகாரிகளின் மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்
பொலிஸ் அலுவலர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்களின் மனோநிலை தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பொலிஸ் அலுவலர் ஒருவர் நான்கு அலுவர்களை சுட்டுக் கொன்றதன் அடிப்படையில் இந்த கோரிக்கையை மூன்றாம் கண் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள குடியியல் அமைப்பு ஒன்று விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அமைப்பின் சார்பில் கருத்துரைத்த நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதான இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸ் அலுவலர்கள் பொது மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதும் பலப்பிரயோகங்களை பயன்படுத்துவதும் நாளாந்தம் இடம்பெறும் நிகழ்வுகளாக அமைந்துள்ளன.
பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் பொலிஸ் நிலையங்களே செயற்பட்டு வருகின்றன.
எனினும் அங்கு சென்று தமது முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இன்று பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றி உள்ளதாக ரஞ்சித் விதான குறிப்பிட்டார்.
எனவே அவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த மத பிரசாரங்கைளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகர கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லையென்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார் மன அழுத்தங்களுக்கு உட்படும் போது அவர்கள் தாம் பாதுகாப்பு வழங்கும் அரசியல்வாதிகள் மீதும் தாக்குதல்களை நடத்தலாம் என்றும் ரஞ்சித் விதான இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan