நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை முல்லைத்தீவு பொலிஸார் நேற்று (18-03-2023) இரவு கைது செய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
புதுமாத்தளன் கடற்கரையினை அண்டிய பகுதியில் நால்வர் நிலத்தினை தோண்டிக்கொண்டிருந்த வேளை இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் நால்வரையும் கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் சவல் என்பனவற்றையும் மீட்டுள்ளார்கள்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேலும் இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி முழங்காவில் பகுதியினை சேர்ந்த மூவரும் மற்றும் தென்பகுதியினை சேர்ந்த ஒய்வுபெற்ற படைவீரர் ஒருவரும் என இனம் காணப்பட்டுள்ளது.
இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
இளவாலை
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் மூளாய் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை
திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் வோட்டர் ஜெல் எனப்படும் திரவ வெடிபொருட்களுடன் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 02 சந்தேக நபர்களிடம் இருந்து 58 வணிக வெடிகுண்டுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (18) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வோட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் 58 குச்சிகளைத் தவிர, முச்சக்கரவண்டியில் இருந்து 100 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வர்த்தக வெடிமருந்துகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் போலியா தங்கமுலாம் பூசப்பட்ட முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (19.03.23) இடம்பெற்றுள்ளது.
ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போலி தங்கமுலாம் பூசப்பட்ட 1400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த
சந்தேகநபரை கைதுசெய்த முல்லைத்தீவு பொலிஸார் போலி முத்துக்களை மீட்டுள்ளதுடன்
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் (20.03.23) நாளை முல்லைத்தீவு மாவட்ட
நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
