திருகோணமலையில் திருடிய மாடு ஒன்றை அறுத்த இருவர் தப்பியோட்டம்
திருகோணமலை சிவன் கோவிலுக்குப் பின்னால் உள்ள மரம் ஒன்றில் திருடிய மாடு ஒன்றை இருவர் கட்டி வைத்து அறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (21.11.2025) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு அறுத்த இறைச்சியை இன்று (22.11.2025) அதிகாலை 1.30 மணியளவில் அவ்விருவரும் வீதியால் கொண்டு சென்றபோது, அதனைக் கண்ட இளைஞர் ஒருவர் அவர்களைத் துரத்தியுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இளைஞரின் துரத்தலைத் தாங்க முடியாத அவ்விருவரும், அவர்கள் கொண்டு சென்ற அறுத்த இறைச்சி, அத்துடன் இறைச்சி அறுக்கப் பயன்படுத்திய கோடரி, கத்தி என்பன போன்ற அனைத்துக் கருவிகளையும் அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாக மாடு அறுக்கப்பட்டமை தொடர்பிலும், தப்பியோடிய இருவர் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |