யாழில் 14 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்த நபர் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவருடன் தவறான முறையில் நடந்துகொண்ட சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை போட்டு சிறுமிக்கு கொடுத்து தவறான முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் வன்முறைகள்
சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது.

எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர் பிள்ளைகளை தனியாக விட்டு விட்டோ அல்லது பாதுகாப்பற்ற நபர்களுடன் விட்டு விட்டோ வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்லும் போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புரொடவுஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 21 மணி நேரம் முன்
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam