அரசியற் கைதிகளுக்கு நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்
இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று கிட்டுப் பூங்காவில் நடைபெற்றன.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
விடுதலை நீர்
மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர் கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போது மதத் தலைவர்கள், அரசியற் கட்சிச் செயற்பாட்டாளர்கள், அரசியற் கைதிகளின் குடும்பத்தினர், விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியற் கைதிகள், குடிமக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்குகொண்டிருந்ததோடு, விடுதலை நீர் கையளிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
கறுப்பு ஜுலைக் காலவரத்தின் போது இலங்கை வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் இனவழிப்பின் அங்கமாக தமிழ் அரசியற் கைதிகள் படுகொலை நாட்களில், அவற்றினை நினைவுகூர்ந்து குறித்த “விடுதலை” கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமையும் நோக்கத்தக்கது.


ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri