ராஜபக்ச அரசுக்கெதிராக சபை அமர்வில் எதிர்பில் ஈடுபட்ட புத்தளம் நகரசபை உறுப்பினர்கள்(Photos)
ராஜபக்ச அரசுக்கெதிராகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் இன்று(26) புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைந்துள்ள கோட்டா கோ கமயிலிருந்து மாட்டு வண்டிகளிலும் துவிச்சக்கர வண்டிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் சபை அமர்விற்கு சென்றிருந்தனர்.
சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசுக்கெதிராக பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் 7 நகரசபை உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்களும், ஐக்கிய சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயாதின கட்சியின் ஒரு உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி கட்சியின் உறுப்பினர் ஒருவரும் எதிர்பில் ஈடுபட்டனர்.
இதன்போது ஐக்கிய பொதுஜன பெரமுன கட்சியின் நகரசபை உப தலைவரும் நகரசபை உறுப்பினர் ஒருவரும் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காணமுடிந்தது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
