கொரோனா பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் அவ்வப்போதான பிசிஆர் பரிசோதனைகளில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒரு முறை அவ்வப்போதான இந்த பிசிஆர் பரிசோதனைகள் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கு ஒருமுறை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் போதும், நாடாளுமன்ற கூட்டங்கள் நடத்தப்படாத நேரத்திலும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை கொரோனா தொற்றாளரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் இணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்திக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட 190 பேரில் எவருக்கும் கொரோனா தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri