பதுளையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள்! கட்டடப் பணிகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதுளை-லுனகல பகுதியில் வீட்டுத் திட்ட கட்டுமானப் பணியில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஹல்துமுல்ல, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வசித்து வரும் 50 குடும்பங்களுக்காகவே இந்த கட்டுமானப்பணிகள் நேற்று(28) மேற்கொள்ளப்பட்டன.
அடிப்படை உரிமை
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவிகளுக்கு அப்பால், தாம் கட்டடத் தொழிலாளிகளாக பணியாற்றுவதாக இதன்போது அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம், நாட்டிற்கு வெளிநாட்டு நாணய வருமானத்தை ஈட்டிக்கொடுக்க அயராது உழைத்துள்ளது, ஆனால் அவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பதற்கு முன்னர் ஹட்டன் நகரில் வைத்து வழங்கிய உறுதிமொழிக்கு இணங்க, மலையக சமூகத்திற்கு முறையான வீட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் இப்போது செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
