கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் அமைச்சர்களுக்கு விருந்து
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
25 இலட்சம் ரூபா செலவு
“குறித்த உல்லாசப் பயணம் நேற்று(09.01.2024) மேற்கொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் அதில் கலந்து கொண்டுள்ளார்.
துறைமுகத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, துறைமுக அதிகாரசபை இந்த சிறிய கப்பல்களை முன்பதிவு செய்துள்ளது.
இந்த பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவழித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
