முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு
முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் சி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவிற்கு நேற்றைய தினம் (21.03.2024) வருகை தந்த சி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை அழைப்பு
மேலும், தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை இன்றைய தினம் (22.03.2024) விமான நிலையத்தில் அமைந்துள்ள சி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கியுள்ளனர்.

அத்தோடு, குடிவரவு குடியகல்வு தொடர்பான குற்றம் ஒன்றில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர்களை விசாரணைக்காக அழைக்கப்படிருக்கலாம் எனவும் ஒரு தரப்பின் கருத்தும் அமைந்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam