தமிழரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட மற்றுமொரு விலகல் கடிதம்
தமிழரசுக் கட்சியின் முன்னாள் அங்கத்தவர் மாணிக்கம் உதயகுமார், கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியினால் தான் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டமையினாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவர், 2020ஆம் ஆண்டு அப்போது வகித்த மட்டக்களப்பு அரச அதிபர் பதவியை தூக்கியெறிந்து தமிழரசுக் கட்சியின் முழுநேர அங்கத்துவராக செயற்பட்டவர் ஆவார்.
தன்னிச்சையாக செயற்படும் கட்சி
அத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர் 21,999 விருப்பு வாக்குகளை பெற்றார்.
எனினும், இன்று இதனை ஒருசிலர் தமது தனிப்பட்ட வெற்றியாகக் கருதி தன்னிச்சையாக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |