சஜித் அணியில் இணையும் முக்கிய அரசியல் குடும்ப உறுப்பினர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரருமான ருவான் ரணதுங்க (Ruwan Ranatunga) எதிர்கால அரசியலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் மினுவங்கொடை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திலும் ருவான் ரணதுங்க கலந்து கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான வேலைத்திட்டங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மினுவங்கொடை அமைப்பாளர் சமிந்த டி சில்வா இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ருவான் ரணதுங்கவின் தந்தையான காலஞ்சென்ற ரெஜி ரணதுங்க (Regge Ranatunga) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
அத்துடன் ருவான், தற்போதைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க (Arjuna Ranatunga) ஆகியோரின் சகோதருமாவார்.