இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி அது படிப்படியாக விருத்தியடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கம் காரணமாக இன்றைய தினம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan