சீ.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி தடயவியல் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தன்னை அங்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எந்த முறைப்பாடு சம்பந்தமாக, எப்படியான விசாரணை என்பது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த சட்ட ரீதியான விசாரணையில் சாட்சியமளிக்கவும்,விசாரணை முன்னெடுக்க போதுமான ஒத்துழைப்புகளை வழங்கவும் எப்போதும் தயாராக இருக்கின்றேன்.
விசாரணை தொடர்பான உரிய விடயங்கள் இன்றி விடுக்கப்படும் அழைப்பு சம்பந்தமாக மேலதிக சட்ட ஆலோசனை பெற வேண்டியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி அவரது ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam