பாண் துண்டுடன் நாடாளுமன்றத்திற்குள் வந்த உறுப்பினர்:அவையில் அமளி
ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று நாடாளுமன்ற அவைக்குள் கால் இறாத்தல் பாணை கொண்டு வந்ததன் காரணமாக இன்று பிற்பகல் அவையில் அமளி ஏற்பட்டுள்ளது.
கையில் எடுத்து வந்த பாணை வைத்துக்கொண்டு உரையாற்றிய நளின் பண்டார, கால் இறாத்தல் பாணை கொள்வனவு சாப்பிட்டு வாழ்ந்து வந்த மக்களுக்கு, பாண் விலை அதிகரித்துள்ளதால், பட்டினியில் இறக்க நேரிட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
மக்களுக்கு தற்போது பாண் என்ற வார்த்தையை கூட கூறிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அதேவேளை நாடு முழுவதும் சமையல் எரிவாயு, எரிபொருள், பால் மா வரிசைகளில் மக்கள் இருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாணின் விலை அதிகரித்துள்ளதால், கால் இறாத்தல் பாண் 35 ரூபாயாக அதிகரிக்கும். நாட்டில் தற்போது தோல்வியான ஆட்சி நிர்வாகம் உருவாகியுள்ளது.
பசில் ராஜபக்ச ஏழு மூளைகளை கொண்டவர் என கூறினாலும் தலையில் சிறிதளவும் மூளையை கொண்டிராதவர் எனவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam